சத்தீஸ்கரில் 10 மாவோயிஸ்டுகளுக்கு தூக்குத்தண்டனை
ராய்ப்பூர், சத்தீஸ்கரில் 2013-ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் வழக்கில் 10 மாவோயிஸ்டுகளுக்கு என்.ஐ.ஏ. நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது. இந்தியா
சத்தீஸ்கரில் 2013-ஆம் ஆண்டு நடந்த தாக்குதல் வழக்கில் 10 மாவோயிஸ்டுகளுக்கு என்.ஐ.ஏ. நீதிமன்றம் தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
இந்தியாவில் ஆந்திரம், தெலுங்கானா, ஒடிசா, சத்தீஸ்கர், ஜார்க்கண்ட், பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட மாநிலங்களில் மவோயிஸ்டுகள் தீவிரவாதிகளின் ஆதிக்கம் ஓங்கியிருந்தது.
இவர்களுக்கு எதிராக மத்திய அரசும், மாநில அரசும் கடும் நடவடிக்கைகளை எடுத்தன. இதன் விளைவாக மாவோயிஸ்டுகளின் ஆதிக் கம் ஒடுக்கப்பட்டுவிட்டது. கடைசியாக சத்தீஸ்கர் மற்றும் ஜார்க்கண்ட் மாநிலங்களில் தான் ஒரு சில மாவோயிஸ்டுகள் இருந்தார்கள். இப்போது அவர்களும் ஒடுக்கப்பட்டு விட்டனர்.





