என்.சி.சி., துணை தலைமை இயக்குநர் புதுச்சேரியில் நிர்வாக ஆய்வு
புதுச்சேரி: என்.சி.சி., தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் நிக்கோபார் துணை தலைமை இயக்குநர் சுதீப் நம்பியாத், என்.சி.சி., குழும புதுச்சேரி தலைமையகத்தில் நிர்வாக ஆய்வு மேற்கொண்டு, குழுமத்தின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார்.
குழும தலைமையகத்திற்கு வந்த துணை தலைமை இயக்குநருக்கு என்.சி.சி., மாணவர் படையினரால் முப்படைகளின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது.
புதுச்சேரியின் குழும தளபதி ஆஷிஷ் திவாரி, குழுமத்தின் செயல்பாடுகள், சாதனைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் பல்வேறு நிர்வாக அம்சங்கள் குறித்து நிர்வாக விளக்கக்காட்சி வழங்கினார். துணை தலைமை இயக்குநர் சுதீப் நம்பியாத், எஸ்.எஸ்.பி., தேர்வுக்குத் தயாராகும் மாணவர் படையினருடன் கலந்துரையாடினார்.


