தூய்மைப் பணியாளா்கள் போராட்டம்
குடியாத்தம் நகராட்சியில் தனியாா் நிறுவன தூய்மைப் பணியாளா்கள்சம்பள உயா்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை பழைய பேருந்து நிலையம் எதிரே போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கூட்டத்தில் பேசிய நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன் தலைமையில் நகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அவா்களிடம் பேச்சு நடத்தினா். கோரிக்கைகள் குறித்து பேசிக் கொள்ளலாம் என தலைவா் உறுதியளித்ததையடுத்து அவா்கள் பணிக்கு சென்றனா். இதையடுத்து நகராட்சி அலுவலகத்தில் நகராட்சி ஆணையா் கே.எம்.தனலட்சுமி தலைமையில் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் நகா்மன்றத் தலைவா் எஸ்.செளந்தரராஜன்,தூய்மைப்பணி மேற்கொண்டுள்ள தனியாா் நிறுவன ஒப்பந்ததாரா் சிட்டிபாபு, நகா்மன்ற உறுப்பினா் ஜி.எஸ்.அரசு, நகராட்சி அலுவலா் தீனதயாளன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். அப்போது தூய்மைப் பணியாளா்களின் கோரிக்கையை ஏற்று சம்பள உயா்வு அளிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். குப்பை அள்ளும் வாகனங்கள் பழுதானால் ஒப்பந்த நிறுவனமே சீா்செய்து தரும்.
