ஹிமாசலில் தொடர் மழை: 87 சாலைகள் மூடல்
ஹிமாசலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக 87 சாலைகள் மூடப்பட்டிருப்பது பற்றி...
ஹிமாசலில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக மொத்தம் 87 சாலைகள் மூடப்பட்டுள்ளன.
மாநில அவசரகால செயல்பாட்டு மையத்தின் தகவல்படி, மூடப்பட்டுள்ள 87 சாலைகளில் அதிகபட்சமாக மண்டி மாவட்டத்தில் 37, அதைத் தொடர்ந்து குலுவில் 22, காங்ராவில் 8, சம்பாவில் 5, சிர்மார் மற்றும் உனாவில் தலா 4, சிம்லாவில் 3, சோலனில் 2 மற்றும் லாஹூல்-ஸ்பிதி மற்றும் பிலாஸ்பூரில் தலா 1 சாலையும் முடங்கியுள்ளன.
இதுதவிர, 27 மின் மாற்றிகள் மற்றும் 19 குடிநீர் விநியோகத் திட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே மாநிலத்தின் சில பகுதிகளில் மிதமான மழை தொடர்ந்து பெய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வியாழக்கிழமை மாலை முதல் சிர்மார் மாவட்டத்தில் உள்ள நஹான் பகுதியில் 67.3 மி.மீ மழை பதிவாகியுள்ளது.


