சேலையூரில் 17 தெரு நாய்கள் விஷம் வைத்து கொலை?
தாம்பரம்: சேலையூர் அடுத்த மாடம்பாக்கத்தில் 17 தெரு நாய்கள், வாயில் ரத்தம் வழிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தன.
தாம்பரம் மாநகராட்சி, மாடம்பாக்கம், யஸ்வந்த் நகர், ஏ.எல்.எஸ்., நகர் உள்ளிட்ட பகுதிகளில், ஏராளமான தெரு நாய்கள் உள்ளன. இப்பகுதிகளின் வெவ்வேறு தெருக்களில், 17 தெரு நாய்கள் ரத்தம் வழிந்த நிலையில், நேற்று இறந்து கிடந்தன.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், மாநகராட்சிக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வந்து, இறந்த நாய்களின் உடல்களை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
