மாசுபடும் ஆறுகள்
இன்றைய மனிதகுலத்தின் வாழ்வு மட்டுமன்றி, நாளைய தலைமுறையின் வாழ்வும் செழிக்க ஆறுகளின், தூய்மையைப் பராமரிப்பது மிக அவசியம்.
திருநெல்வேலி மாவட்டம், தாமிரவருணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள மண்டபம் ஒன்றுக்கு உரிமை கோரும் ஒருவரின் மனு மீதான விசாரணையின்போது, தாமிரவருணி ஆற்றின் சுற்றுச்சூழல் மாசுபடாமல் இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்திய சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு, இறந்தவர்களின் ஆடைகள் உள்ளிட்ட உடைமைகளை தாமிரவருணியில் வீசுவதற்கு தடை விதித்துள்ளது.
மேலும், தினமும் சுமார் ஒரு டன் எடையுள்ள ஆடைகள் தாமிரவருணி ஆற்றில் வீசப்படுவதாகக் கூறப்படுகிறது. இறந்தவர்களுக்கான சடங்குகள் என்ற பெயரில் பொதுமக்களால் தாமிரவருணி ஆறு மாசடையாமல் இருப்பதை மாவட்ட நிர்வாகம் உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை அமர்வு உத்தரவிட்டுள்ளது.



