முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம்... 2வது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் கிடைக்குமா? ஐகோர...
சட்டப்படி திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர்களைத் தான் விதவையாக கருத முடியும், எனக்கூறி, தமிழரசிக்கு குடும்ப ஓய்வூதியம் வழங்கும்படி தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார்.
முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல், இரண்டாவது திருமணம் செய்து கொண்ட அரசு ஊழியரின் இரண்டாவது மனைவிக்கு குடும்ப ஓய்வூதியம் பெற உரிமை இல்லை என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
தமிழக பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றியவர் ஆர்.சமன். அவரது மறைவுக்குப் பிறகு, சமனின் இரண்டாவது மனைவியான தமிழரசி, குடும்ப ஓய்வூதியம் கோரி அரசுக்கு விண்ணப்பித்தார்.




