ராஜநாகம் மீட்பு
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டம் காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்டது தேக்கம்பட்டி கிராமம்.
இங்கு உள்ள தனியார் தோட்டத்தின் ஒன்றில், ராஜ நாகம் உள்ளே புகுந்தது. உடனடியாக மேட்டுப்பாளையம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
வனச்சரகர் சசிகுமார் தலைமையிலான வனப்பணியாளர்கள், சம்பவ இடத்திற்கு சென்று 12 அடி நீளம் உள்ள ராஜ நாகத்தை பிடித்தனர். பின்னர் வனப்பகுதியில் பாம்பு விடப்பட்டது.

