சாதிவாரிக் கணக்கெடுப்பு: வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு - மாணிக்கம் தாகூர்
சென்னை,சாதிவாரிக் கணக்கெடுப்பு வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளா
சாதிவாரிக் கணக்கெடுப்பு வெறும் எண்ணிக்கைக்காக அல்ல; சமூகநீதிக்கான உரிமைக் கணக்கு என்று தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர் எம்.பி. தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-
சாதிவாரி கணக்கெடுப்பு மற்றும் பெருநிறுவனங்களின் வாராக்கடன் விவரங்களை வெளியிட மோடி அரசு தொடர்ந்து தயங்குவது, ஆதிக்கச் சலுகைகளை பொதுவெளியில் மறைக்கும் அவர்களின் வர்க்க மற்றும் சாதிய இரட்டை வேடத்தையே அம்பலப்படுத்துகிறது. சுப்ரீம் கோர்ட்டு 2015-லேயே தீர்ப்பளித்தும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) மற்றும் பாங்க் ஆஃப் பரோடா போன்ற பொதுத்துறை வங்கிகள் 28 சதவிகிதம் மட்டுமே வசூலான ரூபாய் 35,716 கோடி பெருநிறுவனக் கடன்களைத் தள்ளுபடி செய்து வேண்டுமென்றே கடனைத் திருப்பிச் செலுத்தாதவர்களின் (Willful Defaulters) பெயர்களை வெளியிட மறுக்கின்றன.
அதேபோல, தொகுதி மறுவரையறை காரணங்களுக்காகக் கணக்கெடுப்பைத் தள்ளிப்போட்ட மோடி அரசு, சமூக நீதி அமைச்சகம் எஸ்.சி. / ஓ.பி.சி. பட்டியல்களைத் தரத் தயாராக இருந்தும் 'பட்டியல் இல்லை' எனப் பொய் சொல்லி, சாதிவாரி கணக்கெடுப்பை முடக்க 'திறந்தவெளிக் கேள்வி' (Open-ended question) என்ற சதியை அரங்கேற்றியுள்ளது.



