பேச்சு, பேட்டி, அறிக்கை
பா.ஜ., தன்னார்வ தொண்டு நிறுவனங்களின் தமிழக பிரிவு தலைவர் அர்ஜுனமூர்த்தி அறிக்கை:
திருக்குறளின் ரஷ்ய மொழிபெயர்ப்பை, அந்நாட்டு அதிபர் புடினுக்கு பிரதமர் மோடி வழங்கி உள்ளார். ஆனால், அதன் ஆன்மா அழகிய தமிழ். ரஷ்ய மண்ணில் தமிழின் பெருமையை தாங்கி நிற்கிறது திருக்குறள். இது, தமிழின் தொன்மைக்கும், திருக்குறளின் உலக பொதுமைக்கும் பிரதமர் மோடி அளித்த மற்றுமொரு மரியாதை.
திருக்குறளின் பெருமைக்கு, 'காப்புரிமை' வாங்கியவங்க மாதிரி பேசும் தி.மு.க.,வினர், இதை எல்லாம் பாராட்ட மாட்டாங்களே!



