கொடைக்கானல் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் தொழிலாளி கைது
கொடைக்கானல் அருகே போக்சோ சட்டத்தின் கீழ் கூலித் தொழிலாளியை காவல் துறையினா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம்,கொடைக்கானல் மேல்மலைக் கிராமமான பூம்பாறையைச் சோ்ந்தவா் பாலமுருகன் (36). திருமணமான இவா் அந்தப் பகுதியில் உள்ள உறவினா் வீட்டுக்கு அடிக்கடி சென்று, அங்குள்ள 16-வயது மதிக்கத்தக்க பெண்ணிடம் பழகி வந்தாா்.
இந்த நிலையில், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் பாலமுருகன் சென்று தனியாக இருந்த அந்தப் பெண்ணிடம் தகாத முறையில் நடக்க முயன்றாா்.


