ஒருநாள் உலகக் கோப்பையின் ‘கிங்’... நெருங்க முடியாத ரோகித் சர்மாவின் சாதனைகள்
புதுடெல்லி,இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் தொடக்க ஆட்டக்காரருமான ரோகித் சர்மா, உலகக் கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் பல்வேறு சாதனைகளை படைத்துள்ளார். 1
ரோகித் சர்மா இதுவரை 2015, 2019 மற்றும் 2023-ம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை தொடர்களில் இந்திய அணிக்காக விளையாடியுள்ளார். மொத்தம் 28 போட்டிகளில் 60.57 என்ற சராசரியுடன் 1,575 ரன்கள் குவித்துள்ளார்.
உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த பேட்டர்களின் பட்டியலில் ரோகித் சர்மா தற்போது 4-வது இடத்தில் உள்ளார். சச்சின் டெண்டுல்கர் (2,278 ரன்கள்), விராட் கோலி (1,795 ரன்கள்), ரிக்கி பாண்டிங் (1,743 ரன்கள்) ஆகியோர் அவருக்கு முன்னிலையில் உள்ளனர்.
ஒருநாள் உலகக் கோப்பை வரலாற்றில் அதிக சதங்கள் அடித்த வீரர் என்ற சாதனை ரோகித் சர்மா வசம் உள்ளது.




