26 ரன்களுக்கு ஆல்-அவுட்... டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி எது தெரியுமா?
சென்னை, டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகக் குறைந்த ஸ்கோரை பதிவு செய்த அணி எது என்பதை தற்போது பார்க்கலாம். மோசமான சாதனைடெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி மிகக் குறைந்த ரன்கள
டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு அணி மிகக் குறைந்த ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது பற்றி பேசும்போதெல்லாம், இந்தியாவின் 36 ரன்கள்தான் ரசிகர்களுக்கு நினைவுக்கு வரும். கடந்த 2020-ம் ஆண்டு ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 36 ரன்களுக்கு சுருண்டது.
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றிலேயே மிகச்சிறந்த கேப்டன்களில் ஒருவராகப் பெயர் பெற்ற விராட் கோலியின் தலைமையின் கீழ்தான் இந்தியா இந்த மோசமான சாதனையை பதிவு செய்தது.
இருப்பினும், டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இதைவிடவும் குறைந்த ஸ்கோர் ஒன்று பதிவாகியுள்ளது. ஒரு அணி வெறும் 26 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆகியுள்ளது. அது ஏதேனும் அறிமுக அல்லது இளம் அணியாக இருக்கும் என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. 26 ரன்களுக்கு சுருண்ட அந்த அணி சிறிய அணி அல்ல, உலக கிரிக்கெட்டின் சிறந்த அணிகளில் ஒன்றாக கருதப்படும் நியூசிலாந்துதான்.


