கொலம்பியாவில் ருசிகரம்: புறணி பேசி 2 வீடுகள் வாங்கிய மூதாட்டி
பொகோட்டா,கொலம்பியாவில் அக்கம்பக்கத்தில் நடக்கும் வதந்திகளையும், பிறருடைய ரகசியங்களையும் சேகரித்து விற்பனை செய்ததன் மூலம், கொலம்பியாவைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி
கொலம்பியாவில் அக்கம்பக்கத்தில் நடக்கும் வதந்திகளையும், பிறருடைய ரகசியங்களையும் சேகரித்து விற்பனை செய்ததன் மூலம், கொலம்பியாவைச் சேர்ந்த 67 வயது மூதாட்டி ஒருவர் 2 சொந்த வீடுகளை வாங்கியுள்ள விசித்திரமான சம்பவம் உலக அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலம்பியா நாட்டின் குவாண்டியோ மாகாணத்தில் உள்ள ஆர்மீனியா நகரைச் சேர்ந்த மூதாட்டி மிரியம் (67 வயது). மிரியம் தினமும் காலையில் தனது வீட்டின் வாசலில் அமர்ந்து, அக்கம்பக்கத்தில் நடப்பவற்றை உன்னிப்பாக கவனிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார். குடும்ப சண்டைகள், கள்ளக்காதல் விவகாரங்கள், தனிநபர் மோதல்கள் என பகுதியில் நடக்கும் அனைத்து சுவாரசியமான விஷயங்களையும் ஆதாரங்களுடன் சேகரிக்கிறார். இதனால் மூதாட்டி, அப்பகுதியில் "வதந்திகளின் ராணி" அல்லது ஸ்பானிஷ் மொழியில் 'சிஸ்மோசா' என்று அழைக்கப்பட்டார்.
மிரியம் சாதாரணமாக கிடைக்கும் தகவல்களை ஒரு நோட்டுப் புத்தகத்தில் தேதிகள் மற்றும் நேர குறிப்புகளுடன் துல்லியமாக எழுதி வைக்கிறார். மேலும் சில சம்பவங்களைப் புகைப்பட ஆதாரங்களாகவும் சேகரித்து வைத்துள்ளார். அன்றாட சாதாரண செய்திகள் அல்லது வதந்திகளைத் தெரிந்துகொள்ள விரும்புபவர்களிடம் 5,000 முதல் 10,000 கொலம்பிய பெசோக்கள் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.150 - ரூ.300) வரை கட்டணம் வசூலிக்கிறார்.


/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062524269z-nkn-png-logo-100x100-nakkheeran-adops.png)