பஞ்சாப்: போலீஸ் நிலையம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல்
சண்டிகர்,பஞ்சாப்பில் போலீஸ் நிலையம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கையெறி குண்டு வீச்சுபஞ்சாப் மாநிலம் பசி
பஞ்சாப்பில் போலீஸ் நிலையம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
பஞ்சாப் மாநிலம் பசில்கா மாவட்டம் ஜலாலாபாத்தில் போலீஸ் நிலையம் உள்ளது. இந்த போலீஸ் நிலையத்திற்கு இன்று அதிகாலை 2 மணியளவில் வந்த மர்ம நபர்கள் போலீஸ் நிலையம் மீது கையெறி குண்டு வீசி தாக்குதல் நடத்தினர்.
இந்த கையெறி குண்டு வீச்சு தாக்குதலில் போலீஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 2 வாகனங்கள் சேதமடைந்தன. தாக்குதலில் போலீசார் யாருக்கும் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை.


