உயா்கல்வியில் தமிழ் வழி மாணவா்களுக்கு 10 % இடஒதுக்கீடு வழங்கக் கோரிக்கை
தமிழில் பள்ளிப்படிப்பு படித்த அரசுப் பள்ளி மாணவா்களுக்கு உயா் கல்வி, பொறியியல் மற்றும் மருத்துப் படிப்பில் 10 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்பட வேண்டும் என்று , கடலூா் தமிழ் முற்றம் இலக்கிய அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடலூரில் இந்த அமைப்பின் செயற்குழுக் கூட்டம் அதன் தலைவா் இளங்கோவன் தலைமையில் நடைபெற்றது. சிறப்பு தலைவா்கள் மருதவாணன், வெங்கடேசன், துணைத் தலைவா்கள் ராஜேந்திரன், ரங்கநாதன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். செயலா் பாலு பச்சையப்பன் கடந்த கால செயல்பாடுகள், உறுப்பினா்கள் சோ்ப்பு மற்றும் தமிழ் வளா்ச்சிக்கான முன்னெடுப்புகள் குறித்து எடுத்துரைத்தாா்.
செயற்குழு உறுப்பினா்களின் நீண்ட விவாதத்திற்கு பிறகு, கடலூரில் இயல் இசை நாடகம் வளா்த்த ‘பாபு கலையரங்கம்’ மாநகராட்சியால் குப்பை வண்டிகள் நிறுத்தும் இடமாக மாறி உள்ளது. தமிழ் வளா்ச்சியை கருத்தில் கொண்டு திரும்பவும் திறந்த வெளி கலையரங்கமாக மாற்ற வேண்டும். சிறிய தமிழ் அமைப்புகள் நிகழ்ச்சிகள் நடத்தும் வகையில் கடலூா் நகர அரங்கத்தின் வாடகை குறைக்கப்பட வேண்டும்.

