சேலம்: பல ஆண்களுடன் ரகசிய உறவு; கண்டித்த கணவனுக்கு நேர்ந்த கொடூரம்; அதிர்ச்சி பின்னணி என்ன?
''தன்னுடைய 13 வயது மகனையும் இந்தக் கொடூர கொலையில் ஈடுபடுத்தியிருக்கிறார். கொலை மறக்கவே சினிமாவை மிஞ்சும் வகையில் நாடகமாடியிருக்கிறார்'' - போலீஸ்.
சேலம் மாவட்டம் ஓமலூரைச் சேர்ந்தவர் 45 வயதான பூபதி. சங்ககிரி சாலை அருகில் செங்கல் சூளை நடத்தி வந்திருக்கிறார். இவரின் மனைவி 31 வயதான சுஜிதாஸ்ரீ.
கடந்த 31 - ம் தேதி அதிகாலை காரில் சென்று கொண்டிருந்த போது திடீரென வழிமறித்த ஒரு கும்பல் ஒன்று கணவரை வெட்டி படுகொலை செய்துவிட்டு நகைகளைத் திருடிச் சென்றதாக உறவினர்கள் மற்றும் காவல்துறையினரிடம் தெரிவித்திருக்கிறார் சுஜிதாஸ்ரீ.



