ரயில்வே ஊழியர்களுக்கு புதிய குடியிருப்பு அவசியம்: சேலம் கோட்ட மேலாளரிடம் வலியுறுத்தல்
குன்னுார்: 'நீலகிரி மலை ரயில் ஊழியர்களுக்காக புதிய குடியிருப்புகள் கட்ட வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டது.
நீலகிரி மலை ரயில் பாதையில், சேலம் கோட்ட ரயில்வே மேலாளர் பன்னாலால் ஆய்வு செய்தார். அவர் குன்னுார் வந்த போது, 'தக்ஷிண் ரயில்வே எம்ப்ளாய்ஸ் யூனியன்' நிர்வாகிகள் சந்தித்து மனு அளித்து பேசினர்.
அதில், 'சமீபத்தில் குன்னுார் ரயில்வே குடியிருப்பில் நடந்த திருட்டு சம்பவத்தை கருத்தில் கொண்டு அங்கு சி.சி.டி.வி., கேமராக்கள் பொருத்த வேண்டும்; லவ்டேல், கேத்தி, மேட்டுப்பாளையம் மற்றும் கல்லார் பகுதிகளில் புதிய ரயில்வே குடியிருப்புகளை கட்ட வேண்டும்; தற்போது மிகவும் பாழடைந்த நிலையில் உள்ள மேட்டுப்பாளையம் ரயில்வே குடியிருப்புகளை சீரமைக்க வேண்டும்,' என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டன.



