வேலூர் வியாபாரியிடம் `நிறம் மாறும் கற்கள்’ வழிப்பறி - ஒருவர் கைது; 2 பேருக்கு வலை!
வியாபாரியிடம் இருந்து விலையுயர்ந்த கற்களைப் போன்ற தோற்றமளிக்கும் நிறம் மாறும் கற்களை பறித்துச் சென்ற நபரைப் போலீஸார் கைது செய்தனர். | color-changing stones resembling gemstones snatched from a vellore merchant – one person arrested
வியாபாரியிடம் இருந்து விலையுயர்ந்த ரத்தினக் கற்களைப் போன்ற தோற்றமளிக்கும் நிறம் மாறும் கற்களை பறித்துச் சென்ற நபரைப் போலீஸார் கைது செய்தனர்.
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டு அருகேயுள்ள பல்லலகுப்பம் கிராமம் ராமர் கோயில் தெருவில் வசிப்பவர் ஆனந்தகுமார் (வயது 58). இவரின் மனைவி ஷைலா, ஒன்றிய கவுன்சிலராக இருந்தவர்.
இந்த நிலையில், ஆனந்தகுமார் தன்னிடம் ``பட்டைத் தீட்டப்படாத இயற்கையான 7 கற்கள் இருக்கின்றன. இது ஜோதிட பலன்கள் நிறைந்த `அலெக்ஸாண்ட்ரைட்’ என்ற வகையைச் சார்ந்த அதிர்ஷ்டக் கற்கள். மிக அரிய, அதிசயமான நிறம் மாறும் தன்மைக் கொண்டது. இதற்கான சான்றிதழ்களும் சென்னையிலுள்ள ரத்தினக்கல் ஆய்வகம் மூலமாக பெற்றுள்ளேன்’’ என்று கூறி, இடைத்தரகர்கள் சிலரிடம் லாபத்துக்கு விற்றுத் தரக்கோரி அணுகியுள்ளார்.



