துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகை..!
சென்னை,துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் நாளை சென்னை வருகிறார். கிண்டி ஐ.டி.சி. சோழா ஓட்டலில் மதியம் 3 மணிக்கு நடைபெறும் இந்தியா வால்வ்ஸ்-2026 தேசிய கல்வி கூட்ட
இதய வால்வு மற்றும் கட்டமைப்பு ரீதியான இதய நோய்களுக்கான சிகிச்சையை மேம்படுத்தும் நோக்கில் நடைபெறும் இந்த நிகழ்ச்சியில், இந்தியா வால்வ் பதிவேட்டை துணை ஜனாதிபதி சி.பி.ராதாகிருஷ்ணன் தொடங்கி வைக்கிறார்.
இதைத்தொடர்ந்து, மாலை 4.30 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெறும் விழாவிலும் துணை ஜனாதிபதி பங்கேற்கிறார்.
துணை ஜனாதிபதி வந்து செல்லும் மீனம்பாக்கம், கிண்டி, நுங்கம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை அதிகரித்துள்ளனர். பாதுகாப்பு காரணங்களுக்காக இந்த பகுதிகள் சிவப்பு மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளன.



