திண்டுக்கல் மாநகராட்சியில் காய்கறி கழிவுகளில் இருந்து மின்சாரம் தயாரிப்பு
திண்டுக்கல், திடக்கழிவு மேலாண்மை திட்டம்சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்றி அவற்றை மாற்று சக்தியாக மாற்றவும் திடக்கழ
திடக்கழிவு மேலாண்மை திட்டம்சுற்றுச்சூழலை பாதுகாக்கவும், வீடுகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை முறையாக அகற்றி அவற்றை மாற்று சக்தியாக மாற்றவும் திடக்கழிவு மேலாண்மை திட்டம் தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இதன்படி, திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட 48 வார்டுகளிலும் தினமும் தூய்மை பணியாளர்கள் மூலம் வீடு, வீடாக சென்று குப்பைகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அப்போது, பொதுமக்கள் தங்கள் வீடுகளில் மக்கும் குப்பைகள் மற்றும் மக்காத குப்பைகளை தனித்தனியாக தரம் பிரித்து வழங்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு மாநகராட்சி முழுவதும் தினமும் சேகரிக்கப்படும் குப்பைகளில், மக்கும் குப்பைகள் மட்டும் தனியாக பிரிக்கப்படுகின்றன. அவ்வாறு தினமும் சுமார் 42 டன் அளவுக்கு மக்கும் குப்பைகள் சேருகின்றன. இந்த குப்பைகளை வீணாக்காமல், அவற்றில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

