உறுப்பு தானம் மூலம் பத்து பேருக்கு மறுவாழ்வு அளித்த இளைஞர்
மதுரை, செப். 9 – திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் சாலை விபத்தில் காயமடைந்த தனியார் வங்கி ஊழியர்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் சாலை விபத்தில் காயமடைந்த தனியார் வங்கி ஊழியர் கலையரசன்ஜெயபாண்டி 22, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சை பெற்ற நிலையில் மூளைச்சாவு அடைந்தார்.
அவரது உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன்வந்து வழங்கப்பட்டது. ஒரு சிறுநீரகம் மீனாட்சி மிஷன் மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் சிகிச்சையில் இருந்த ஒரு நோயாளிக்கு பொருத்தப்பட்டது. மற்றொரு சிறுநீரகம், திருச்சி காவேரி மெடிக்கல் சென்டர் மற்றும் மருத்துவமனைக்கும், கல்லீரல், இரட்டை நுரையீரல், பிரிக்கப்பட்ட கல்லீரல் டாக்டர் ரேலா இன்ஸ்டிடியூட் மற்றும் மெடிக்கல் சென்டருக்கும் பகிர்ந்து வழங்கப்பட்டன. இதயம் சென்னை எம்.ஜி.எம்., ஹெல்த் கேர் மருத்துவமனைக்கும், கருவிழிகள் இரண்டும் அரவிந்த் கண் மருத்துவமனைக்கும் அனுப்பி வைக்கப்பட்டன. இதன்மூலம் பத்து நோயாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கப்பட்டது. மீனாட்சி மிஷன் மற்றும் ஆராய்ச்சி மருத்துவமனையின் மருத்துவகுழுவினர் கலையரசன் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தி உடலை குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர். அவரது இறுதிச்சடங்கு அரசு மரியாதையுடன் நடந்தது.




