பொதுக்குழு கூட்டம்
விழுப்புரம்: திண்டிவனத்தில், வணிகவரித்துறை ஓய்வு பெற்ற அலுவலக மற்றும் பணியாளர்கள் நலச் சங்க பொதுக்குழு கூட்டம் மற்றும் வாழ்நாள் சாதனையாளர்கள் விருது பெற்றோருக்கு பாராட்டு விழா நடந்தது.
விழாவிற்கு, வணிக வரித்துறை துணை கமிஷ்னர் ராஜசேகரன் தலைமை தாங்கினார். சங்க மாவட்ட தலைவர் ஞானம் முன்னிலை வகித்தார்.
வாழ்நாள் சாதனையாளர் விருது பெற்ற மாநில தலைவர் கோட்டை ராசு, நிறுவன தலைவர் வைத்தியநாதன், பொதுச்செயலாளர் ராசரத்தினம், கோட்டத்தலைவர் அரங்கநாதன் ஆகியோருக்கு பாராட்டு தெரிவித்தனர். பொதுச்செயலாளர் ஜனார்த்தனன், கோட்டச்செயலாளர் வீரபத்திரன் சிறப்புரையாற்றினர். கடலுார் மாவட்ட தலைவர் சம்பத் நன்றி கூறினார். இதில் சங்கத்தினர் பலர் கலந்து கொண்டனர்.