“தரமான சம்பவம் காத்திருக்கு” - 'தி பாரடைஸ்' படம் குறித்து பேசிய நானி
சென்னை,நான் மிகவும் எதிர்பார்க்கும், அதிகமாக உழைத்த திரைப்படம் இது; தரமான சம்பவம் காத்திருக்கு, அனிருத் உடன் இணைந்து பணியாற்றியது மிகவும் ஸ்பெஷல்," என 'தி பாரடை
நான் மிகவும் எதிர்பார்க்கும், அதிகமாக உழைத்த திரைப்படம் இது; தரமான சம்பவம் காத்திருக்கு, அனிருத் உடன் இணைந்து பணியாற்றியது மிகவும் ஸ்பெஷல்," என 'தி பாரடைஸ்' படம் குறித்து சென்னை செய்தியாளர் சந்திப்பில் நடிகர் நானி பேசியுள்ளார்.
நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023-ம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தசரா'. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நானிஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் 'தி பாரடைஸ்'. எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நானி இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
'தி பாரடைஸ்' படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. மோகன் பாபு சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


