ராசிமணலில் புதிய அணை கோரி விவசாயிகள் 20ம் தேதி நடைபயணம்..!
சென்னை,காவிரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் மாநிலம் தழுவிய நடைபயணம் மேற்கொள்ள முடிவு
காவிரியில் கிருஷ்ணகிரி மாவட்டம் ராசிமணல் பகுதியில் புதிய அணை கட்ட வேண்டும் என்பதை வலியுறுத்தி, தமிழக விவசாயிகள் மாநிலம் தழுவிய நடைபயணம் மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.
காவிரியின் குறுக்கே மேகதாது பகுதியில் அணை கட்ட கர்நாடக அரசு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கான காவிரி நீரோட்டம் பாதிக்கப்படும் என கூறி, தமிழகத்தில் அத்திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது.
மேகதாது அணைக்கு மாற்றாக, தமிழகப் பகுதியில் உள்ள ராசிமணலில் புதிய அணை கட்ட வேண்டும் என தமிழக விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.


