எல்நினோவால் சாதகம்: தூத்துக்குடியில் 80 சதவீதத்தை எட்டிய உப்பு உற்பத்தி
தூத்துக்குடி,தூத்துக்குடி மாவட்டத்தில் எல்நினோவால் சாதகமான சூழல் உருவானதால், 80 சதவீதம் உப்பு உற்பத்தியாகி உள்ளது. அதேசமயம் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் க
தூத்துக்குடி மாவட்டத்தில் எல்நினோவால் சாதகமான சூழல் உருவானதால், 80 சதவீதம் உப்பு உற்பத்தியாகி உள்ளது. அதேசமயம் விலை வீழ்ச்சியால் உற்பத்தியாளர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையா புரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 25 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்து உள்ளன. இவைகளில் சுமார் 50 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம் டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது.
நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தப்படியாக தூத்துக்குடி மாவட்டம் உள்ளது. இங்கு ஜனவரி மாதம் உப்பு உற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை 6 மாதங்கள் உப்பு உற்பத்திக்கான உச்சகட்ட காலங்கள் ஆகும். அக்டோபர் மாதம் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு சீசன் முடிவடையும்.



