போலீஸ் செய்திகள்
தொழிலாளி தற்கொலைதேனி: கொடுவிலார்பட்டியை சேர்ந்த தொழிலாளி ரமேஷ் 58. இவரது மனைவி அமுதமலர், சென்னையில் பணி செய்கிறார். ரமேஷ் சர்க்கரை நோயால் அவதிப்பட்ட இவர் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்தார். மகள் மகேஸ்வரி புகாரில் பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.பேனர் வைத்தவர் மீது வழக்குதேனி: முத்தனம்பட்டியை சேர்ந்தவர் ஜெயகணேஷ் 25. இவர் க.விலக்கு பகுதியில் உள்ள திருமண மண்டபம் முன்பு அனுமதி இன்றி பேனர் வைத்தார். க.விலக்கு போலீசார் ஜெயகணேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.40 கிலோ புகையிலை பறிமுதல்தேனி: அல்லிநகரத்தை சேர்ந்தவர் ஆதிலிங்கம் 60. இவர் க.விலக்கு–வருஷநாடு ரோட்டில் ஜி.கல்லுபட்டி பிரிவில் டூவீலரில் சென்றார். அவரை க.விலக்கு போலீசார் சோதனை செய்தனர். அவரிடம் 40 கிலோ புகையிலை பொருட்கள் இருந்தன. அவற்றை பறிமுதல் செய்து கைது செய்தனர்.
சேவல்கள் திருட்டுதேனி: வைகை அணை பகுதி அண்ணா நகரை சேர்ந்தவர் ராஜசேகர் 29. இவர் கோழிகள் வளர்க்கிறார். இவரது வீ்ட்டிற்கு மினி வேனில் சென்ற மர்மநபர்கள் ரூ.7000 மதிப்புள்ள 4 சேவல்களை திருடி சென்றனர். அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி.,யில் இக்காட்சிகள் பதிவானது. ராஜசேகர் புகாரில் வைகை அணை போலீசில் விசாரிக்கின்றனர்.
தேனி: பங்களாமேட்டை சேர்ந்த தொழிலாளி கண்ணன் 38. திருமணம் ஆகவில்லை. இவர் வீட்டில் துாக்குப்போட்டு தற்கொலை செய்தார். அண்ணன் நாகராஜன் புகாரில் தேனி போலீசார் விசாரிக்கின்றனர்.
