ராமேஸ்வரம் மீனவர்கள் நடுக்கடலில் விரட்டியடிப்பு
ராமேஸ்வரம்: நடுக்கடலில் மீன்பிடித்த ராமேஸ்வரம் மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் இலங்கை கடற்படை வீரர்கள் விரட்டி அடித்தனர்.
செப்., 14ல் ராமேஸ்வரத்தில் இருந்து 340 விசைப்படகுகளில் மீனவர்கள் மீன்பிடிக்க சென்றனர். இவர்கள் வழக்கம் போல் இந்திய-- இலங்கை எல்லையில் மீன்பிடித்த போது அங்கு இரு கப்பலில் ரோந்து வந்த இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கியை காட்டி எச்சரித்து மீனவர்களை மீன்பிடிக்க விடாமல் விரட்டினர்.
கைதுக்கு பயந்து கடலில் வீசிய வலையை அவசரமாக படகில் இழுத்து வைத்துக் கொண்டு ராமேஸ்வரம் நோக்கி திரும்பினர். பின் ராமேஸ்வரம் கடல் பகுதியில் மீன் பிடித்ததில் எதிர்பார்த்த மீன்கள் கிடைக்காமல் தொழில் நஷ்டத்துடன் கரை திரும்பினர்.

