போக்கு வரத்து நெரிசலால் கடும் அவதி: பொது மக்கள் சாலையை அகலப்படுத்த நடவடிக்கை தேவை
கச்சிராயபாளையம்: கச்சிராயபாளையத்தில் அடிக்கடி ஏற்படும் போக்கு வரத்து நெரிசலால் பொது மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர்.
கச்சிராயபாளையம் சுற்றியுள்ள பகுதிகள் கிராமங்கள் அதிகளவில் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்களின் முக்கிய தேவைகளுக்காக கச்சிராயபாளையம் வந்து செல்கின்றனர். மேலும் கச்சிராயபாளையத்தில் இருந்து சென்னை, சேலம், திருச்சி, பெரம்பலுார், கடலுார், திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு பஸ்கள் இயக்கப்படுகிறது.
கச்சிராயபாளையம் சுற்றுபுற பகுதி மற்றும் கல்வராயன்மலை பகுதிகளை சேர்ந்த பொது மக்கள் மாவட்ட தலைநகரான கள்ளக்குறிச்சி செல்வதற்கு கச்சிராயபாளையம் வழியாகவே செல்ல வேண்டி உள்ளது. கள்ளக்குறிச்சி, சின்னசேலம் பகுதிகளிலிருந்து பல்வேறு கிராமங்களுக்கு கச்சிராயபாளையம் வழியாக தினமும் நுாற்றுகணக்கான டவுன் பஸ்கள் இயக்கப்படுகிறது.





