கோவில்பட்டி அருகே பெண்ணுக்கு கொலை மிரட்டல்: தொழிலாளி கைது
கோவில்பட்டி அருகே பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக தொழிலாளியை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி அருகே இடைச்செவல் காலனி தெருவைச் சோ்ந்த முருகன் மகன் கழுவன் (31). தொழிலாளியான இவா், இளம்பெண்ணை அவதூறாக பேசி கொலை மிரட்டல் விடுத்தாராம். இதை கண்டித்த அப்பெண்ணின் உறவினரையும் அவதூறாக பேசி தாக்கினாராம்.
இதுகுறித்து அப்பெண் அளித்த புகாரின்பேரில், நாலாட்டின்புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, தொழிலாளி கழுவனை திங்கள்கிழமை கைது செய்தனா்.
