மதுரை மீனாட்சியும் மகாத்மா காந்தி கண்ட ஜீவசக்தியும்!
மதுரை மீனாட்சியம்மன் தரிசனமும் தீண்டாமைக்கு எதிரான மகாத்மா காந்தியின் மனவுறுதியும் பற்றித் தினமணியின் கருவூலத்திலிருந்து...
மதுரைக்கு வரும் வழியில் மணப்பாறை நிலையத்தில் ரயிலில் இருந்தபடியே மக்களிடையே பேசுகிறார் மகாத்மா காந்தி... - தினமணி கருவூலத்திலிருந்து...
மதுரைக்கு ஐந்து முறை வந்திருக்கும் மகாத்மா காந்தி, ஒரு முறை கோவில் வாசல் வரை வந்து திரும்பிவிட்டுத் தன் வாழ்நாளின் கடைசிப் பயணத்தில்தான் மீனாட்சியம்மன் கோவிலுக்குச் செல்கிறார்; நீண்ட நாள் விருப்பம் ஈடேறியதெனக் குறிப்பிட்டதுடன், அம்மனிடம் ஜீவசக்தியைக் கண்டதாகவும் தெரிவிக்கிறார்.

