சிலம்பம் விளையாடிய எம்.பி., தடுமாறி விழுந்ததால் பரபரப்பு
மயிலாடுதுறை: மயிலாடுதுறையில், முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட விளையாட்டு போட்டிகள் தொடக்க விழா, கலெக்டர் ஸ்ரீகாந்த் தலைமையில் நேற்று நடந்தது. மயிலாடுதுறை காங்., - எம்.எல்.ஏ., ஜமால் முகமது யூனுாஸ், காங்., - எம்.பி., சுதா ஆகியோர் போட்டிகளை தொடங்கி வைத்தனர்.
போட்டியை தொடங்கி வைத்த சுதா, சிலம்பாட்டம் ஆடினார். அப்போது தடுமாறி கீழே விழுந்தார். சக வீரர்கள் அவரை துாக்கிவிட்டதும், தொடர்ந்து சிலம்பம் விளையாடி, இரண்டாவது சுற்றில் வெற்றி பெற்றார்.

