வக்கீலாக களமிறங்கும் விஷால்!.. துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படம்
சென்னை,தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது அடு
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் விஷால். ஆக்ஷன் மற்றும் வித்தியாசமான கதைக்களங்களை தேர்வு செய்து நடித்து வரும் இவர், தற்போது அடுத்தடுத்த படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில், விஷாலின் புதிய படம் குறித்த தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ‘மகுடம்’. சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை விஷால் இயக்கி நடித்திருந்தார். படத்தில் விஷாலுக்கு ஜோடியாக துஷாரா விஜயன் நடித்திருந்தார். நடிகை அஞ்சலி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் வெளியான இப்படம் ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது.
‘மகுடம்’ படத்தை தொடர்ந்து விஷால், இயக்குநர் சுந்தர்.சி இயக்கத்தில் உருவாகி வரும் ‘புருஷன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக தமன்னா நடித்து வருகிறார். வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இப்படம் குறித்த அடுத்தடுத்த அப்டேட்கள் மீது ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.



