உலகிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்ட நாடுகள்: முதல் இடத்தில் எந்த நாடு தெரியுமா?
பொதுவாக, அனைவருக்கும் கடற்கரைகள் என்றால் மிகவும் பிடிக்கும். குடும்பத்துடன் நேரத்தை செலவிடவும், தனியாக நேரத்தை கழிக்க விரும்புபவர்களுக்கும் அல்லது அமைதியை தேடுபவர்களுக்கும் கடற்கரைகள் ஒரு நல்ல தேர்வாக இருக்கிறது. ஆனால், உலகின் மிக நீளமான கடற்கரைகளை கொண்ட 10 நாடுகள் எது என்று நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா? அது பற்றிய விவரங்களை பார்க்கலாம்.
உலகிலேயே மிக நீளமான கடற்கரையை கொண்ட நாடாக கனடா உள்ளது. அட்லாண்டிக், பசிபிக் மற்றும் ஆர்க்டிக் பெருங்கடல்களை ஒட்டி அமைந்துள்ள கனடாவின் கடற்கரை 2 லட்சம் கிலோமீட்டருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
ஆயிரக்கணக்கான தீவுகள், பாறைகள் கொண்ட கடலோர பகுதிகளை கொண்டதாக நார்வே உள்ளது. இந்த நாட்டின் கடற்கரை 83 ஆயிரம் கிலோமீட்டருக்கும் அதிகம் என மதிப்பிடப்பட்டுள்ளது.
