டீக்கடையில் தீ விபத்து ரூ.80,000 பொருட்சேதம்
இடைப்பாடி: சேலம் மாவட்டம் இடைப்பாடி, நைனாம்பட்டியை சேர்ந்தவர் மாரியப்பன், 69. இவர், இடைப்பாடி - சேலம் பிரதான சாலையில் டீக்கடை நடத்துகிறார். நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு கடையை திறந்து, அதன் முன்புறம் டீ போட்டுக்கொண்-டிருந்துள்ளார். காலை, 7:15 மணிக்கு கடை உள்ளே குளிர்சாதன பெட்டி இருந்த இடத்தில் தீப்பற்றியது. மாரியப்பன் பார்த்து கூச்-சலிட்டபடி வெளியே வந்தார்.
உடனே மக்கள் தகவல்படி, இடைப்பாடி தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் தலைமையில் வீரர்கள் வந்து, தீயை அணைத்-தனர். ஆனால் குளிர்சாதன பெட்டி உள்ளிட்ட பொருட்கள் எரிந்து, 80,000 ரூபாய் மதிப்பில் சேதமானது. இடைப்பாடி போலீசார் முதல்கட்ட விசாரணையில், மின்கசிவால் தீ விபத்து ஏற்பட்டது தெரிந்தது.
