தர்மசாஸ்தா உற்சவமூர்த்தி பிரதிஷ்டை விழா கோலாகலம்
ப.வேலுார்; ப.வேலுார் காவிரி ஆற்றுக்கு செல்லும் சாலையில் உள்ள அக்ரஹாரம் பகுதியில், பிர-சித்தி பெற்ற ராஜராஜேஸ்வரி ஆசிரமம் உள்ளது. இந்த ஆசிரம வளாகத்தில், தர்ம சாஸ்தா ஆலயம் புதிதாக அமைக்கப்பட்டு, தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவமூர்த்தி பிரதிஷ்டை விழா, நேற்று நடந்-தது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, 7:00 மணிக்கு யாக வேள்வியும், காலை, 10:00 மணிக்கு தர்மசாஸ்தா ஐயப்பன் உற்சவமூர்த்திக்குல, 18 வகை திரவியங்களால் மகா அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, மலர்களால் வழங்கப்பட்ட தர்ம சாஸ்-தாவுக்கு மகா தீபாராதனை காட்டப்பட்டது. இதில் ப.வேலுார் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், ஐயப்ப பக்தர்கள் கலந்து கொண்-டனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.
தொடர்ந்து, நேற்று மாலை தர்ம சாஸ்தா ஐயப்பன், ப.வேலுார் அக்ரஹாரத்தில் திருவீதி உலா வருதல் நிகழ்ச்சி நடந்தது. விழா ஏற்பாடு-களை ராஜராஜேஸ்வரி ஆசிரமத்தை சேர்ந்த நிர்-வாகிகள் மற்றும் ஐயப்ப பக்தர்கள் செய்திருந்தனர்.

