கார்கள், வேன், பஸ் மோதல்
உசிலம்பட்டி: விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்றனர். பின்னர் உசிலம்பட்டி வழியாக மதுரை மீனாட்சியம்மன் கோயில் கும்பாபிஷேகத்திற்கு காரில் சென்றனர்.
உசிலம்பட்டியில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கல்லுாரி அருகே, தேனியில் இருந்து வந்த பயணியர் வேன், மற்றொரு கார், மதுரை சென்ற தனியார் பஸ் என ஒன்றுடன் ஒன்று உரசி விபத்துக்குள்ளாயின. இதில் நான்கு வாகனங்களிலும் சேதம் ஏற்பட்டது. பஸ்சின் முன்பக்கம் சேதமடைந்து, கண்ணாடி உடைந்து நொறுங்கியது. அதிர்ஷ்டவசமாக வாகனங்களில் இருந்தவர்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர். உசிலம்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.
