முதல்-அமைச்சர் ஆலோசகர் நியமன அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன்? - நயினார் நாகேந்திரன்
சென்னை,முதல்-அமைச்சர் ஆலோசகர் நியமன அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார். இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகே
முதல்-அமைச்சர் ஆலோசகர் நியமன அரசாணையை வெளியிட அஞ்சுவது ஏன் என்று நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
இது தொடர்பாக, பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்திருப்பதாவது;
முதல்-அமைச்சர், ஜான் ஆரோக்கியசாமி என்பவரைத் தனது ஆலோசகராக அமர்த்தி, அவருக்கு அரசு வாகனம், காவல்துறைப் பாதுகாப்பு மற்றும் தலைமைச் செயலகத்திலேயே தனி அலுவலகம் என அரசு அதிகாரத்தை வாரி வழங்கியுள்ளார். இந்த நியமனம் குறித்த அரசாணையைத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் (RTI) கீழ் கேட்டால், முன்னுக்குப் பின் முரணான பதில்களை வழங்கி உண்மையை மூடி மறைக்கிறது தவெக அரசு. இது அரசின் வெளிப்படைத் தன்மையற்ற போக்கை அம்பலப்படுத்துவதோடு, அதன் பின்னணியில் உள்ள முறைகேடுகளை மறைக்கும் முயற்சியாகும்.





