அசத்தும் சாதனை
தென்கொரியாவில் அறிவியல், ஆராய்ச்சித் துறைகளில் பணியாற்றி வரும் தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த இணைப் பேராசிரியர் முனைவர் பாலமுரளிகிருஷ்ணனின் அறிவியல் சாதனையை ஊக்குவிக்கும் வகையில், சேஜோங் பல்கலைக்கழகம் சார்பில் பாராட்டு விழா அண்மையில் நடைபெற்றது.
'தென்கொரியாவில் கல்வி, ஆராய்ச்சி, தொழில்நுட்பம், மென்பொருள், இயந்திரவியல் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இந்தியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களில் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர்.
நான் சேஜோங் பல்கலைக்கழகத்தில் உயிரித் தொழில்நுட்பம், உணவு அறிவியல் தொடர்புடைய ஆராய்ச்சித் துறைகளில் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வருகிறேன்.
