ஆத்துார் ஊராட்சி அலுவலகம் கட்டுமான பணி மந்தம்
செங்கல்பட்டு, செப். 6– ஆத்துார் ஊராட்சி அலுவலக கட்டுமான பணி எட்டு மாதங்களாக மந்தகதியில் நடந்து வருவதாக,
ஆத்துார் ஊராட்சி அலுவலக கட்டுமான பணி எட்டு மாதங்களாக மந்தகதியில் நடந்து வருவதாக, அப்பகுதி மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.
செங்கல்பட்டு அடுத்த, ஆத்துார் ஊராட்சியில் ஆத்துார், வடகால், தென்பாதி, வடபாதி உள்ளிட்ட பல்வேறு கிராமங்கள் உள்ளன. இங்கு, 5,000க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். செங்கல்பட்டு – காஞ்சிபுரம் சாலையில், ஆத்துார் ஊராட்சி அலுவலகம் இயங்கி வந்தது.
இந்த அலுவலகத்தில், வீட்டு வரி, குடிநீர் வரி உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்து, அப்பகுதி மக்கள் மனு அளித்து பயனடைந்து வந்தனர். இந்நிலையில், 25 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட, ஊராட்சி அலுவலகம் சிதிலமடைந்தது. இதனால், கோப்புகளை பாதுகாப்பதில் அலுவலர்கள் சிரமப்பட்டனர். அதன்பின், அதே பகுதியில் உள்ள தனியார் கட்டடத்திற்கு ஊராட்சி அலுவலகம் மாற்றப்பட்டது. இங்கு, இட நெருக்கடியால், ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர்.


