கர்நாடகாவில் நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 2.5 ஆக பதிவு..!
பெங்களூரு,கர்நாடகாவின் பல்லாரி பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கர்நாடகாவில் மதியம் 1.38 மணியளவில் ரிக்டர் அளவில் 2.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவா
கர்நாடகாவின் பல்லாரி பகுதியில் இன்று மதியம் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மதியம் 1.38 மணியளவில் ரிக்டர் அளவில் 2.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
5 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம், 15.108 டிகிரி வடக்கு அட்சரேகையிலும், 76.646 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையிலும் இருக்கும் என முதலில் தீர்மானிக்கப்பட்டது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எந்தவித தகவலும் உடனடியாக வெளியாகவில்லை.

