வழக்குப்பதிவுகளை அதிகரிக்க அறிவுறுத்தல்
தேனி;மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், போடி, ஆண்டிபட்டி, உத்தமபாளையம் ஆகிய 5 சப் டிவிஷன்கள் உள்ளன. அவற்றின் கீழ் 5 மகளிர் போலீஸ் ஸ்டேஷன்கள் உட்பட 33 போலீஸ் ஸ்டேஷன்கள் உள்ளன. ஒவ்வொரு சப்டிவிஷனிலும் மாதந்தோறும் சுமார் 840 வழக்குகள் பதிவாகிறது. ஆனால் மாநில அளவில் தேனி மாவட்டத்தில் வழக்குகளின் எண்ணிக்கை குறைவாகவே பதிவாகிறது.
இதனை அதிகரிக்க போலீஸ் ஸ்டேஷன்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மதுபோதையில் வாகனம் ஓட்டுவோர், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுவோர் உள்ளிட்டோர் மீது உடனடி வழக்கு பதியவும், ரோந்து பணிகளை தீவிரபடுத்தவும் எஸ்.பி., பிரவீன் கவுதம் உத்தரவிட்டுள்ளார்.

