ஹிந்து சிறுமியருக்கு கட்டாய திருமணம் செய்யும் பாகிஸ்தான்
இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில், ஹிந்து சிறுமியர் கடத்தப்பட்டு, கட்டாயமாக மதம் மாற்றப்பட்டு திருமணம் செய்யப்படும் அவலம் தொடர்கிறது.
பாகிஸ்தானின் சிந்து மாகாணத்தில் ஹிந்து பெண்கள், குறிப்பாக கோலி, பீல், மேக்வார் போன்ற ஏழை சமூகத்தைச் சேர்ந்த சிறுமியர் அடிக்கடி காணாமல் போகின்றனர். இவர்கள் கடத்தப்பட்டு, கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டு, பின் திருமணம் செய்து வைக்கப்படுவதாக புகார்கள் வருகின்றன.
இந்தத் திருமணங்கள் சட்டவிரோதமானவை என சிறுபான்மையினர் நல அமைப்புகள் குரல் கொடுத்தும், இதுபோன்ற அவலங்கள் தொடர்கின்றன.

