துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வழிகாட்டி பலகை அமைப்பு
சென்னை: புதிதாக சென்னை வருவோர், செல்லும் இடங்களை எளிதாக அடையாளம் காணும் வகையில், துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.
பல்லாவரம்-- துரைப்பாக்கம் ரேடியல் சாலை, 200 அடி அகலம், 10.5 கி.மீ., துாரம் உள்ளது. சென்னை புறநகரில் உள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து, ஓ.எம்.ஆர்., இ.சி.ஆர்., செல்வோர், ரேடியல் சாலையை பயன்படுத்துகின்றனர்.
குறிப்பாக, ஐ.டி., நிறுவனங்கள் மற்றும் நீலாங்கரை, கோவளம், திருப்போரூர், மகாபலிபுரம், புதுச்சேரி உள்ளிட்ட இடங்களுக்கு ரேடியல் சாலை வழியாக செல்வோர் அதிகம். அதேபோல், இ.சி.ஆர்., ஓ.எம்.ஆர்., வழியாக விமான நிலையம் உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்வோரும் ரேடியல் சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.


