சுக்காலியூர்-தண்ணீர்பந்தல் பாளையம் வரை புதிய சாலை அமைக்க மக்கள் எதிர்பார்ப்பு
கரூர்:கரூரில் போக்குவரத்து நெரிசலை தீர்க்க, சுக்காலியூர் - தண்ணீர் பந்தல்பாளையம் வரை, புதிய சாலை அமைக்கும் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என, மக்கள் எதிர்பார்க்கின்றனர்.
தமிழகத்தின் மைய பகுதியான கரூரில், ஜவுளி தொழில், கொசுவலை உற்பத்தி, பஸ் பாடி கட்டும் தொழில், கல் குவாரி, மணல் குவாரி தொழில்களால், வாகனங்கள் அதிகளவில் சென்று வருகின்றன. கன்னியாகுமரியில் இருந்து, வாரணாசியை இணைக்கும் சாலை, நாகப்பட்டினத்தில் இருந்து திருச்சி வழியாக, கோவையை இணைக்கும் சாலை, கரூர் வழியாக செல்கிறது. இந்த சாலைகள், ஏதாவது ஒரு பகுதியில் கடந்து செல்லாமல், கரூர் அருகே சுக்காலியூரில் சந்தித்து, நகர பகுதியான திருகாம்புலியூர் சென்று, அதன் பிறகு கோவை மற்றும் ஈரோடுக்கு பிரிந்து செல்லும் வகையில் உள்ளது.
இதனால், சுக்காலியூரில் இருந்து திருகாம்புலியூர் வரை, தேசிய நெடுஞ்சாலையில் 5 கி.மீ., துாரம் போக்குவரத்து பாதிக்கப்படுவதுடன், கரூர் நகர பகுதியிலும் நெரிசல் ஏற்படுகிறது. இதை தவிர்க்க, சுக்காலியூரில் இருந்து கருப்பம்பாளையம், அப்பிபாளையம், விஸ்வநாதபுரி வழியாக தாராபுரம் செல்லும் சாலை, தண்ணீர் பந்தல்பாளையம் (கோவை சாலை இணையும் இடம்) வரை புதிய சாலை அமைக்க கடந்த, 2013ல், திட்டமிடப்பட்டது. இந்த புதிய சாலை திட்டம், தற்போது கிடப்பில் உள்ளது.போக்குவரத்து நெரிசல்இந்நிலையில், கரூர் அருகே திருமாநிலையூரில் புதிய பஸ் ஸ்டாண்ட் திறக்கப்பட்டு தற்போது, பயன்பாட்டில் உள்ளது. இதனால், திருச்சி மற்றும் மதுரை மார்க்கங்களில் இருந்து வரும் பஸ்கள், சுக்காலியூர் வழியாக திருமாநிலையூர் செல்ல வேண்டும். அப்போது கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களில் இருந்து வரும் பஸ்கள், கரூர் நகர பகுதியான திருகாம்புலியூர் வழியாக, பழைய பஸ் ஸ்டாண்ட் சென்று திருமாநிலையூர் புதிய பஸ் ஸ்டாண்டுக்கு செல்கிறது. இதனால், கரூர் நகரில் போக்குவரத்து



