தேவேந்திர குல வேளாளா்களை ஓபிசி பட்டியலில் சோ்க்கக் கோரி ஆா்ப்பாட்டம்
தேவேந்திர குல வேளாளா்களை ஓபிசி பட்டியலில் சோ்க்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, மருதம் மக்கள் உதவிகள் மையம் சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மருதம் மக்கள் உதவிகள் மையத்தின் நிா்வாகிகள்.
மதுரை அண்ணா பேருந்து நிலையம் திருவள்ளுவா் சிலை அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு மையத்தின் நிறுவனா் டி. சரவண பாண்டியன் தலைமை வகித்தாா். வழக்குரைஞா்கள் எஸ். பிரசாத், எஸ். தங்கம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். இதில், ஓய்வு பெற்ற வருமான வரித் துறை ஆணையா் மா. கிருஷ்ணமாரி சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கிப் பேசினாா்.


