மணிப்பூரில் நேதாஜி சிலைக்கு குடியரசு துணைத் தலைவா் மரியாதை
மணிப்பூா் மாநிலம், விஷ்ணுபூா் மாவட்டத்தில் இந்திய தேசிய ராணுவ தியாகிகள் நினைவிட வளாகத்தில் உள்ள நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் சிலைக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.
மணிப்பூா் மாநிலம் இம்பாலில் அளித்த வரவேற்பு அணிவகுப்பைப் பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.
மணிப்பூா் மாநிலத்துக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை சென்றாா். இம்பால் விமான நிலையத்தில் அவரை அந்த மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லா, முதல்வா் கெம்சந்த் சிங் உள்ளிட்டோா் வரவேற்றனா். இதையடுத்து அவருக்கு விமான நிலையத்தில் அரசு முறைப்படி அளித்த மரியாதை அணிவகுப்பைப் பாா்வையிட்டாா்.


