தகர சீட் அறையில் அங்கன்வாடி வெயிலால் குழந்தைகள் தவிப்பு
வடமதுரை, செப்.9- பாகாநத்தம் தோப்பூரில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமாகி 4 ஆண்டுகளாக புதிய கட்டடம் அமையாத
பாகாநத்தம் தோப்பூரில் அங்கன்வாடி மைய கட்டடம் சேதமாகி 4 ஆண்டுகளாக புதிய கட்டடம் அமையாத நிலையில் இரும்பு தகர சீட்டினால் அறையில் குழந்தைகள் பரிதவிக்கின்றனர்.
இங்கு ஊர் மைதானம் அருகில் கான்கிரீட் கட்டடம் உருவாகி அங்கன்வாடி மையம் செயல்பட்டு வந்தது. கட்டுமான தரம் குறைவால் கூரை சேதமடைந்தது. ஆயுளும் குறைந்த ஆண்டுகளாக மாறவே தற்போது பூட்டி வைக்கப்பட்டுள்ளது.
மாற்று ஏற்பாடாக அதே ஊரில் இரும்பு தகர சீட்டுகளை கொண்டு அமைக்கப்பட்ட அறையில் கடந்த 3 ஆண்டுகளுக்கு மேலாக அங்கன்வாடி செயல்படுகிறது. வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் நேரங்களில் இங்கு குழந்தைகளுக்கு சிரமமாக இருப்பதாக பெற்றோர் வருத்தத்துடன் தெரிவிக்கின்றனர்.
