கள்ளக்காதலனுடன் சேர்த்து கணவனை கொன்ற இளம்பெண் - அதிர்ச்சி சம்பவம்
லக்னோ,உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹசனாபாத் கிராமத்தை
உத்தரபிரதேசத்தில் கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவனை கொலை செய்த இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் முசாபர்நகர் மாவட்டம் ஹசனாபாத் கிராமத்தை சேர்ந்த இளம்பெண் தபாஷம். இவருக்கு திருமணமாகி ரஹிப் என்ற கணவர் இருந்தார்.
இதனிடையே, தபாஷமிற்கும் அதே கிராமத்தை சேர்ந்த ஷாரூக் என்ற இளைஞருக்கும் இடையே கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. இருவரும் கடந்த ஓராண்டுக்குமேல் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளனர். இதை அறிந்த ரஹிப் மனைவியை கண்டித்துள்ளார். மேலும், ஷாரூக் உடனான கள்ளத்தொடர்பை துண்டிக்கும்படி தபாஷமிடம் கூறியுள்ளார். இதனால் கணவன் , மனைவி இடையே அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
