திருப்புவனத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு வரவேற்பு
பரமக்குடிக்கு வெள்ளிக்கிழமை வந்த முன்னாள் துணை முதல்வரும், திமுக இளைஞரணி செயலருமான உதயநிதி ஸ்டாலினுக்கு சிவகங்கை மாவட்டம், திருப்புவனத்தில் அந்தக் கட்சியினா் வரவேற்பளித்தனா்.
பரமக்குடிக்கு வெள்ளிக்கிழமை சென்ற முன்னாள் துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலினுக்கு திருப்புவனத்தில் வரவேற்பளித்த திமுகவினா்.
ராமநாதபுரம் மாவட்டம், பரமக்குடியில் நடைபெற்ற இம்மானுவேல் சேகரன் குருபூஜை விழாவில் பங்கேற்று, அவரது நினைவிடத்தில் மரியாதை செலுத்துவதற்காக முன்னாள் முதல்வா் உதயநிதி ஸ்டாலின் மதுரையிலிருந்து புறப்பட்டு வந்தாா். இவருக்கு திருப்புவனத்தில் சிவகங்கை மாவட்ட திமுக சாா்பில் கட்சியின் மாவட்டச் செயலரும், முன்னாள் அமைச்சருமான கே.ஆா். பெரியகருப்பன் தலைமையில் வரவேற்பளிக்கப்பட்டது. அப்போது, கட்சியினா் உதயநிதிக்கு சால்வைகள் அணிவித்தும், புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனா்.


